TEKS - LOTE Curriculum

TEKS - LOTE Curriculum​

எமது உலக மொழிக் கல்வி, முழுமையான குழந்தை வளர்ச்சி மற்றும் உலகளாவிய கற்றல் முறைகளைப் பிரதிபலிப்பதுடன், தொடர்பு, பண்பாட்டு புரிதல், மற்றும் கல்விசார் நம்பிக்கையை வளர்க்கிறது.

HTS பாடத்திட்டம் டெக்சாஸ் மாகாண கல்வி நிறுவனம் (TEA) சார்ந்த 
டெக்சாஸ் அடிப்படை அறிவு மற்றும் திறன் (TEKS) ஆங்கிலம் அல்லாத அயல்மொழிகள் (LOTE) தரநிலைகளுடன் ஒருங்கிணைப்பட்டுள்ளது.  இது கற்பித்தல் வரிசையில் வாய்வழித் தொடர்பில் தொடங்கி — மாணவர்களின் கேட்டல் மற்றும் பேசுதல் திறன்களுக்கு முதன்மை அளிக்கிறது. அதைத் தொடர்ந்து அவற்றை வாசிப்பு மற்றும் எழுத்துப் படிப்பில் பிரதிபலிக்கும் வகையில் அமைந்து உள்ளது.   அன்றாட நடைமுறை வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை தமிழ் மொழியின் மூலம் வெளிப்படுத்தும் ஆற்றலுடன் தமிழ் பண்பாடு மற்றும் உலகளவில் ஒரு அங்கமாக மாணவர்கள் தயார் செய்துகொள்ள வழிவகுக்கிறது.   ஒவ்வொரு கற்பித்தல் நிலையிலும் TEKS எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அல்லது அதை விஞ்சும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இயல்பு உலக தொடர்பு மற்றும் பண்பாட்டு இணைப்புகளை உள்ளடக்கியது. 

HTS, Texas Tamil Academy (TTA) பாடத்திட்டத்தை பின்பற்றுகிறது, இது மாணவர்களின் வயதுக்கு ஏற்ற கற்றல் முறைகள் (AAP) அடிப்படையில் - ஆரம்ப நிலைகளில் பேசுதலில் ஆழமாக பங்கேற்கவும், நடுநிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளில் எழுதுதலில் ஈடுபடவும், வார இறுதி பள்ளிகளில் தமிழ்மொழி கற்பதற்க்கு ஏற்றவாறும் வடிவமைக்கப்பட்டுள்ள பாடத்திட்டமாகும். மேலும், HISD உலக மொழிகளைப் போன்று கூர்ந்தாய்தல் செய்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

Pedagogical Foundation​

HTS பாடத்திட்டம் ஆராய்ச்சி அடிப்படையிலான மொழி மேம்பாட்டு அமைப்புகளைப் பின்பற்றுகிறது. இந்த முறைமைகளில் மாணவர்கள் உள் வாங்கி  புரிந்துகொள்ளக்கூடிய கேட்டல், பேசுதலுக்கு முக்கியத்துவம்  கொடுக்கப்பட்டு உள்ளது. அதைப் பின்பற்றி வாசிப்பு மற்றும் எழுத்து திறன்களை ஊக்குவித்து வெளிக்கொணரும் கற்பித்தல் வழி முறைகளால் மேம்படுத்தப் படுகின்றது. இந்த இயல்பான தொடர் கற்றல் வழியாக மாணவர்கள் சாதாரணமாக அல்லது சரளமான கையாளும் திறன்கள் அதிகரிக்கிறது. 

ACTFL ஆரம்ப நிலை வழிகாட்டிகள்

முதலில் மாணவர்கள் தாங்கள் அறிந்த சூழலில் கருத்துக்களை புரிந்து தெரிவிக்கும் திறன்பட்டவர்களாக பழக்குவதில் முக்கியத்தும் கொடுக்கப்பட வேண்டும். எழுத்துத் திறனை பயிற்சிக்கும் செயல்களில் ஈடுபடுவதற்கு முன்பு அதற்குத் தேவையான பேச்சு ஒலியியல் அல்லது ஒலிப்பியல் அறிந்தவர்களாக பயிற்சிப்பது  ஒரு அடிப்படைத் தன்மை. 

ACTFL நடுநிலை வழிகாட்டிகள்

இயல்பு உலக தொடர்பு திறன்கள் பயிற்றுவித்தல். பேச்சு ஒலியியல் அடிப்படையில் மூலக் கருத்துக்களை வெளிப்படுத்த புதிய வழிகளை கற்றல். பலவகையான சொற்களஞ்சியத்தை பயன்படுத்தி முலக்கருத்துக்களை விரிவாக்குல்.

TEKS LOTE (Pre K–5)​

பேசுவதும் கேட்பதும் எழுத்தறிவுக்கு அடிப்படையாகும். 

உரையாடல், கருத்துக்களை உள்வாங்குதல், விளக்கமளிக்கும் மற்றும் விளக்கக்காட்சி தொடர்பு பயன்முறைகளுடன் இணைந்து, கேட்கும் மற்றும் பேசும் திறன்கள் நிறுவப்பட்டதன் அடித்தளத்தின் மீது வாசிப்பு மற்றும் எழுத்துத் திறன்கள் மேம்படுத்துகிறது. 

TEKS LOTE (நடுநிலை – உயர்நிலை)

பயன்பாட்டுத் தமிழ் மற்றும் இலக்கணச் செயல்முறை பயிற்சிகள் மூலம் படைப்பு, கட்டுரை எழுதுதல், கேள்வி மொழிநுட்பம், வாசிப்பு, தங்கள் கருத்துக்களை  ஆராயும் திறன்,பண்பாட்டு வழிமுறைகளை அறிதல், செயல்முறைத்திட்டங்கள் அடிப்படையில் எழுத்துத் திறன்கள் விளக்கத்துடன் விரிவாக எழுதுதல் பயிற்றுவித்தல் கையாளப் படுகிறது. 

Academic Recognition

Houston ISD

Houston ISD LOTE Recognition

Avant STAMP WS

Avant STAMP WS Tamil

Try Sample Avant STAMP WS for Tamil Language

Global Seal of Biliteracy

Additional Resources for Tamil Learning​